Home Featured உலகம் 6 மாத பிரிட்டிஷ் இளவரசி சார்லோட் – அழகு கொஞ்சும் புதிய படங்கள்!

6 மாத பிரிட்டிஷ் இளவரசி சார்லோட் – அழகு கொஞ்சும் புதிய படங்கள்!

774
0
SHARE
Ad

இலண்டன் – ஆறே மாதம் அகவை நிறைவை அடைந்த பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் புதிய வரவு இளவரசி சார்லோட் புகைப்படங்களை அவரது பெற்றோர்கள் இளவரசர் வில்லியம் மற்றும் கேத் மிடில்டன் இருவரும் பொதுமக்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

Charlotte Princessஇளவரசர் வில்லியம் வசிக்கும் கென்சிங்டன் அரண்மனையின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்தப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

“நாங்கள் பார்த்து மகிழ்ந்த இளவரசி சார்லோட்டின் இந்த புகைப்படங்களை அனைவரும் பார்த்து அதே மகிழ்ச்சியை அடைவார்கள் என எதிர்பார்க்கின்றோம்” என இளவரசர் வில்லியம் தம்பதியர் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்தப் புகைப்படங்கள் இளவரசி சார்லோட்டின் தாயார் கேத் மிடில்டன் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் எடுத்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Charlotte Princess 2இளவரசி சார்லோட் பொம்மையுடன் விளையாடும் காட்சி 

-செல்லியல் தொகுப்பு