Home Slider சாமுண்டீஸ்வரி கோவிலில் ஸ்டாலின் சிறப்பு பூஜை – திமுகவில் பரவும் பரபரப்புத் தகவல்!

சாமுண்டீஸ்வரி கோவிலில் ஸ்டாலின் சிறப்பு பூஜை – திமுகவில் பரவும் பரபரப்புத் தகவல்!

660
0
SHARE
Ad

stalinசென்னை – ‘நமக்கு நாமே’ சுற்றுப் பயணம், பொதுக் கூட்டங்கள், வெள்ள நிவாரணப் பணி மேற்பார்வை என கடும் பணிகளில் சிக்கித் தவித்த ஸ்டாலின் தற்போது தனது ஓய்வு நேரத்தை, கேரளாவில் மூலிகை சிகிச்சைக்காக செலவிட இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

எதிர்வரும் 2016 தேர்தலில் வயோதிகம் காரணமாக கருணாநிதியால் கூட்டங்களுக்கு செல்ல முடியாததால், அனைத்து பொறுப்புகளும் ஸ்டாலினிடம் வந்துள்ளன. இதனை எதிர்கொள்ளும் விதமாக ஸ்டாலின் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

உடல் புத்துணர்ச்சி பெற கேரளாவிற்கு அவர் சென்றுள்ள நிலையில், திருவனந்தபுரம் அருகில் உள்ள, கரிக்காகோம் என்ற ஊரில் இருக்கும் சாமுண்டீஸ்வரி கோவிலில் அவர் சிறப்பு பூஜைகள் செய்ய இருப்பதாக திமுக வட்டாரத்திலேயே ரகசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

#TamilSchoolmychoice

ஸ்டாலின், மனைவி துர்காவின் மேற்பார்வையில் நடக்கும் இந்த பூஜையின் முக்கிய நோக்கம், எதிரிகளிடமிருந்து ஸ்டாலினை காப்பாற்றுவதற்குத் தான் என்று கூறப்படுவது கூடுதல் தகவலாகும். ஸ்டாலினுக்கு எதிராக செயல்படுபவர் என திமுக வட்டாரத்திலேயே பரவலாக பேசப்படும் அழகிரியின் அடுத்த அத்தியாயம், திமுகவில் மிக விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுவது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.