பினாங்கு – 2015/16-ம் ஆண்டிற்கான ஹாங் காங் அனைத்துலக மாணவர் புதுமை கண்டுபிடிப்புகள் போட்டியில் (Hong Kong International Student Innovation Invention Contest) பினாங்கு ராமகிருஷ்ணா தமிழ்ப் பள்ளி மாணவர்கள் 4 பேர் தங்கப் பதக்கங்களை வென்று மலேசியாவிற்குப் பெருமை தேடித் தந்துள்ளனர்.
வளரும் நாடுகளில் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் ‘இரைச்சலை’ தவிர்க்க இரைச்சல் குறைப்பானைக் கண்டுபிடித்து, கேலின் எவிலின் தாமஸ் (வயது 12), உஷா சந்திரிகா விஜேந்திரன் (வயது 12), ஷாலினி பிரியங்கா கண்ணன் (வயது 12) மற்றும் வைஸ்னவி சந்திரசேகரன் (வயது 12) ஆகிய நான்கு மாணவர்களும் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
அவர்களின் இந்த முயற்சிக்கு அறிவியல் ஆசிரியராகவும், திட்ட நிர்வாகியாகவும் சியாமளா துரைராஜ் செயல்பட்டுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், அவர்களை வழி நடத்திய ஆசிரியர்களுக்கும் செல்லியல் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
படம்: பால் நாராயணன் (ஆர்டிஎம்)பேஸ்புக்