சமூகம் சார்ந்த பல்வேறு தலைப்புகள் எடுத்து விவாதிக்கப்படும் நீயா? நானாவில்? விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டைக்காக ஒரு நிகழ்ச்சி நடத்தமாட்டார்கள். இது வழக்கம் போல், நட்பு ஊடகங்களில் கிளப்பி விடப்படும் வதந்தி என்று தான் பலரும் நம்பினார்கள். ஆனால், உண்மையாக அப்படி ஒரு தலைப்பு நேற்று இரு தரப்பு ரசிகர்களை அழைத்து விவாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.
இந்த தலைப்பை எடுத்து விவாதிக்கும் அளவிற்கு, இவர்களின் சண்டை சமூகப் பிரச்சனையாகிவிட்டதா? அல்லது இவர்களை வைத்து விஜய் தொலைக்காட்சி நடத்திய வர்த்தக சூதா? என காரசாரமான விவாதங்கள் தற்போது நட்பு ஊடகங்களில் நடைபெற்று வரும் நிலையில், இரு தரப்பு ரசிகர்கள் பொது வெளியில் பகிரங்கமாக மோதிக் கொள்வதை தடுக்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ஒரு சாரார் விளக்கம் அளித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், விஜய் ரசிகர் ஒருவர், அஜித் ரசிகரைப் பார்த்து கூறிய வார்த்தை ஒன்று
இதன் மூலம், உண்மையில் ‘பூனைக்கு மணிக்கட்டும்’ நோக்குடன் விஜய் தொலைகாட்சி இந்த பிரச்சனையை கையில் எடுத்து இருந்தாலும் சரி, அல்லது வர்த்தக நோக்கமாக இருந்தாலும் சரி, இந்த நிகழ்ச்சிக்கான வரவேற்பு, அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.