Home Featured கலையுலகம் சென்னை வெள்ளம்: நிவாரண நிதியாக ரஜினி 10 லட்சம் வழங்கினார்!

சென்னை வெள்ளம்: நிவாரண நிதியாக ரஜினி 10 லட்சம் வழங்கினார்!

630
0
SHARE
Ad

rajinikanth-rm-veerappan-s-90th-birthday-celebrations_144185839380சென்னை – சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில், நகரத்தின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக மாறி வருகின்றன. ஆந்திராவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது, விஜய், விஷால், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் நிதி அளித்த நிலையில், தற்போது ஏன் அவர்கள் முன் வரவில்லை? என தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.

suriyaஇந்நிலையில் சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பல லட்சங்களை நிவாரண நிதியாக வழங்கி உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன் பங்கிற்கு 10 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக அளித்துள்ளார். sivaஅவரது ராகவேந்திரா அறக்கட்டளை சார்பாக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.