Home Featured உலகம் ஏர் ஆசியா QZ8501 விபத்து: “என்றுமே மாறாத வடு” – டோனி உருக்கம்!

ஏர் ஆசியா QZ8501 விபத்து: “என்றுமே மாறாத வடு” – டோனி உருக்கம்!

591
0
SHARE
Ad

airasiaகோலாலம்பூர் – ஏர் ஆசியா QZ8501 விபத்திற்கு காரணம், அவ்விமானத்தில் இருந்த கோளாறான கணிப்பொறியும், பணியாளர்களின் தவறான இயக்கமும் தான் என்று இந்தோனேசிய விசாரணைக் குழு இன்று அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக ஏர் ஆசியா தலைவர் டோனி பெர்னாண்டஸ் தனது உருக்கமான விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.

“இந்த துயரச் சம்பவத்தில் இருந்து உற்பத்தியாளர்களும், விமான போக்குவரத்து துறையும் கற்க வேண்டியது அதிகம் உள்ளன. இது போன்ற துயரங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான தீர்வை நாங்கள் கண்டறியாமல் ஓயமாட்டோம். உளப்பூர்வமான எனது ஆழ்ந்த இரங்கலை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.”

“இந்த துயரச் சம்பவம் என் மனதில் என்றும் மாறாத வடுவாக இருக்கும். எனினும் அனைத்தையும் தாண்டி, ஏர் ஆசியாவை மிகச் சிறந்த நிறுவனமாக மாற்றுவதற்கு நான் உறுதி கொண்டுள்ளேன். இதற்காக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், எனது குழுவினருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.