சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “கடந்த மூன்று மாத காலத்தில் மட்டும் 50 வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து சில ஆயிரம் டாலர்கள் அவர்களுக்கு அறியாமலே திருடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப திருடர்களின் இந்த திருட்டு நாளுக்கு நாள் பெருகி வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.”
“தொழில்நுட்ப திருடர்கள், அண்டிரொய்டு இயங்குதளத்திற்கான மேம்பாடு என்ற பெயரில் வெளியிட்டுள்ள இந்த மால்வேரை, பயனர்கள் தங்கள் திறன்பேசியில் மேம்படுத்தியவுடன், அதன் மேம்பாட்டிற்காக பயனர்களின் கடன் அட்டை எண்களை கேக்கும். பயனர்களும் விபரீதம் அறியாமல் அதனை கொடுக்கும் போது தான், அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் திருடப்படுகிறது”
“இந்த சேவையின் மூலம் திருடர்கள் பல்வேறு இணைய வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளனர். இவற்றிற்கான அடிப்படை, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து உருவாகி உள்ளது” என்று கூறியுள்ளனர்.