1. விமானிகள் பற்றாக் குறையால் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) ஏர் ஆசியா விமானங்கள் இன்று புறப்படுவதற்குத் தாமதமான நிலையில், தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
2. அடுத்த ஆண்டிலிருந்து மின் சிகரெட் மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் திரவம் உள்ளிட்ட சாதனங்களை ஜோகூரில் விற்க அதிகாரப்பூர்வ தடைவிதித்துள்ளது அம்மாநிலம்.
3. இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ரா தீவுப் பகுதியிலுள்ள பெர்மாத்தாங் சியாந்தார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில், அங்கிருக்கும் மிருகக் காட்சியில் இருந்து 18 முதலைகள் வெளியேறிவிட்டதாக அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
4. உலக எயிட்ஸ் தினமான நேற்று ரஷ்யாவின் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளரான பேவல் லோப்கோவ் தனக்கு எச்ஐவி இருப்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். தனது எச்ஐவி நிலையை வெளிப்படையாக அறிவித்த ரஷ்யாவின் முதல் முக்கியப் பிரமுகர் இவர் என்று கூறப்படுகின்றது.
5. யாஹூ நிறுவனம் இந்த வார இறுதியில் தனது தலைமைச் செயல் அதிகாரியையும், நிறுவனத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கவுள்ளது.
6. ஐஎஸ் இயக்கத்திற்கு நாங்கள் உதவவில்லை. நாங்கள் உதவியதை நிரூபித்தால் பதவியை விட்டு விலகத் தயார் என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
7. அரசியலில் ஈடுபட விரும்புகிறேன் என ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
8. சென்னை வெள்ளம்: சைதாப்பேட்டை பாலம் மழை வெள்ளத்தில் முற்றிலும் மூழ்கியது. சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை.
9. மார்க் சக்கர்பெர்க்கின் மகள் மேக்சிமாவின் வரவு மகிழ்ச்சி அளிப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கூறியுள்ளார்.