Home Featured உலகம் கலிஃபோர்னியாவில் அதிபயங்கர துப்பாக்கிச் சூடு: பலர் பலி!

கலிஃபோர்னியாவில் அதிபயங்கர துப்பாக்கிச் சூடு: பலர் பலி!

911
0
SHARE
Ad

san-bernardino-map2சான் பெர்னார்டினோ – அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகணத்தில் இருக்கும் சான் பெர்னார்டினோ நகரில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியானதாகவும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

சான் பெர்னார்டினோவில் மாற்றுத் திறனாளிகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தும் அமைப்பு ஒன்று தனது ஊழியர்களுக்காக கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஊழியர்களும், மாற்றுத் திறனாளிகளும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அதி நவீன ஆயுதங்களுடன் நுழைந்த மூவர், அங்கு கூடி இருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுடத் தொடங்கி உள்ளனர். இதில் பலர் சம்பவ இடத்திலேயே பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

san-bernardino-group1அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து அதி வேக கார் ஒன்றில் ஏறி தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.