Home Featured உலகம் சிரியா மீது வான்வழித் தாக்குதலைத் பிரிட்டன் தொடங்கியது!

சிரியா மீது வான்வழித் தாக்குதலைத் பிரிட்டன் தொடங்கியது!

585
0
SHARE
Ad

இலண்டன் – சிரியா மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்து வரும் மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து கொள்ள, பிரிட்டன் நாடாளுமன்றம் பெரும்பான்மை வாக்குகளில் நேற்று வாக்களித்ததைத் தொடர்ந்து, அடுத்த சில மணி நேரங்களிலேயே பிரிட்டிஷ் விமானங்கள் சிரியா பயங்கரவாத நிலைகள் மீது குண்டுகளைப் பொழியத் தொடங்கின.

david-cameron“பிரிட்டன் அமைதியான பிரதேசமாகத் திகழ எடுக்கப்பட்ட சரியான முடிவு இது” என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், சிரியா தாக்குதல் குறித்து வர்ணித்துள்ளார்.

பாரிஸ் தாக்குதல்களைத் தொடர்ந்து, சிரியாவில் இயங்கிவரும் இஸ்லாமிய நாட்டு பயங்கரவாதிகளைக் குறிவைத்து மேற்கத்திய நாடுகள் தாக்குதல்களை முடுக்கி விட்டுள்ளன.

#TamilSchoolmychoice

நேற்றிரவு பிரிட்டனின் நாடாளுமன்றம் வாக்கெடுப்பின் வழி சிரியா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த, முடிவெடுத்த சில மணி நேரங்களிலேயே ஆயத்த நிலையில் இருந்த பிரிட்டிஷ் போர் விமானங்கள் உடனடியாக தாக்குதல்களைத் தொடங்கின.