Home Featured தமிழ் நாடு சென்னை வெள்ள நிலவரத்தை நேரடியாகக் கண்டறிந்த மோடி!

சென்னை வெள்ள நிலவரத்தை நேரடியாகக் கண்டறிந்த மோடி!

533
0
SHARE
Ad

சென்னை – இன்று மாலை சென்னை வெள்ள நிலவரத்தைக் காண நேரடியாக விமானம் மூலம் வருகை தந்த நரேந்திர மோடிக்கு, அவர் வந்தடைந்த இராணுவ விமானத் தளத்திலேயே உடனடியாக நடப்பு நிலவரங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டன.

இது குறித்த புகைப்படங்கள் மோடியின் இந்தியப் பிரதமருக்கான டுவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.Modi-briefed on flood-airportவிமான நிலையம் வந்தடைந்த மோடிக்கு, விமான ஓடு தளத்திலேயே விளக்கம் வழங்கப்படுகின்றது.

Modi-with jayalalithaa-Chennai flood

#TamilSchoolmychoice

சென்னை வந்தடைந்த மோடி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் சுமார் அரை மணி நேரம் வெள்ள நிலவரம் குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.

அதன் பின்னர் ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதியாக உடனடியாக வழங்கப்படும் என மோடி அறிவித்தார்.

Modi-checking flood from helicopter

பின்னர் மோடி ஹெலிகாப்டர் மூலம் சென்னையைச் சுற்றிப் பார்த்து வெள்ள நிலவரங்களை நேரடியாகக் கண்டறிந்தார்.

இன்று மாலையே தனது சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு மோடி புதுடில்லி திரும்பினார்.

-செல்லியல் தொகுப்பு