Home Featured தமிழ் நாடு சென்னை வெள்ளம் – இறுதி நிலவரம் – ஒரு வரிச் செய்திகள்!

சென்னை வெள்ளம் – இறுதி நிலவரம் – ஒரு வரிச் செய்திகள்!

628
0
SHARE
Ad

chennai-floodசென்னை – தமிழகத் தலைநகரை உலுக்கியுள்ள வெள்ளம் தொடர்பில், இன்று வெள்ளிக்கிழமை காலை வரையிலான இறுதி நிலவரங்கள் – ஒரு வரிச் செய்திகளாக!

  • சென்னையில் மட்டும் 20 பேரிடம் மீட்புக் குழுக்கள்  பணிகளில் ஈடுபட்டுள்ளன.
  • மேலும் 80 படகுகளை அனுப்பவும், கூடுதலாக மேலும் 20 குழுக்களை அனுப்பவும் தேசிய பேரிடர் மீட்புக் குழு தீவிரம்
  • ஒவ்வொரு நிமிடமும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீட்புப் பணிகளைக் கண்காணித்து, அணுக்கமாக விசாரித்து வருகின்றார் எனத் தகவல்
  • நேற்றிரவு வரை சுமார் 5,000 பேர் வெள்ளப் பேரிடரில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
  • அடுத்த 48 மணி நேரம் சென்னைக்கு மிக முக்கியமான, அச்சமூட்டும் காலகட்டமாக இருக்கப் போகின்றது என எச்சரிக்கை
  • 1200க்கும் மேற்பட்ட தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் – 100 படகுகள் – 200 முக்குளிப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  • இந்திய விமானப்படை, மீட்கப்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு ஹைதராபாத் போன்ற நகர்களில் கொண்டு சேர்க்கின்றது
  • 40 இராணுவ மீட்புப் படைக் குழுக்கள் பணியில் இறங்கியுள்ளன.
  • 24 தேசியப் பேரிடர் மற்றும் மீட்புப் படைக் குழுக்கள் இதுவரையில் மீட்புப் பணியில் இறங்கியுள்ளன. மேலும் 15 குழுக்களின் வருகைக்காக காத்திருக்கின்றனர்
  • இந்தியக் கடற்படைக் கப்பல்களும் நிவாரணப் பொருட்களுடன் சென்னை நோக்கி விரைந்துள்ளன.
  • அரக்கோணம் இராணுவ விமான நிலையத்தைத் தளமாகக் கொண்டு இந்திய விமானப் படை விமானங்கள் மீட்புப்பணிகளை மேற்கொள்கின்றன.
  • சுமார் 50,000 பேர் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
  • இன்று முதல் அரக்கோணம் ஐஎன்எஸ் இராஜாளி எனப்படும் இந்திய விமானப்படைத் தளத்திலிருந்து வர்த்தக ரீதியிலான பயணச் சேவைகள் தொடங்கப்படுகின்றன.