Home Featured கலையுலகம் சென்னை பேரிடர்: 5 கோடி நிதியுடன் காத்திருக்கும் விஜய்!

சென்னை பேரிடர்: 5 கோடி நிதியுடன் காத்திருக்கும் விஜய்!

989
0
SHARE
Ad

actor-vijayசென்னை – சென்னை பேரிடரில் இருந்து மக்களை  மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர்களும், அரசியல் தலைவர்களும் பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகின்றனர். வெள்ள நிவாரண நிதியை நேரடியாக அரசிடம் அவர்கள் கொடுத்து வரும் நிலையில், நடிகர் விஜய் 5 கோடி ரூபாய் நிதியுடன் நேரம் கேட்டு காத்திருப்பதாக நம்பத் தகுந்த தகவல்கள்  வந்துள்ளன.

எனினும் தமிழக அரசு சார்பில் அவருக்கு இன்னும் சரியான நேரம் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே சென்னை மற்றும் கடலூர் பகுதிகளில் அவரது ரசிகர் மன்றங்கள் சார்பில் பல்வேறு நிவாரணப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.