Home Featured தொழில் நுட்பம் இந்தியா வருகிறார் சுந்தர் பிச்சை – மோடியை சந்திக்க ஏற்பாடு!

இந்தியா வருகிறார் சுந்தர் பிச்சை – மோடியை சந்திக்க ஏற்பாடு!

542
0
SHARE
Ad

sundarபுது டெல்லி – கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இம்மாதம் இரண்டாவது வாரத்தில் இந்தியா வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்தியப் பிரதமர் மோடி, தனது அமெரிக்க சுற்றுப் பயணத்தின் போது இந்தியாவில் கூகுள் மூலம் மேற்கொள்ள இருக்கும் தொழில்நுட்ப திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். அது தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக்காக சுந்தர் பிச்சை இந்தியா வருவதாகக் கூறப்படுகிறது.

எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

#TamilSchoolmychoice

கூகுள், இந்தியாவில் மேற்கொள்ள இருக்கும் முக்கிய செயல்திட்டங்களில், 500 இரயில் நிலையங்களில் வைஃபை வசதியை மேம்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று.