Home Featured கலையுலகம் பமீலாவோடு நிர்வாணத்திற்கு முழுக்கு போடுகிறது பிளேபாய்!

பமீலாவோடு நிர்வாணத்திற்கு முழுக்கு போடுகிறது பிளேபாய்!

1217
0
SHARE
Ad

Pamela Andersonவாஷிங்டன் – அமெரிக்காவின் பிரபல ‘பிளேபாய்’ மாத இதழ், தனது ஜனவரி/பிப்ரவரி மாத இதழின் அட்டைப் படத்தில் புகழ்பெற்ற கனடா நாட்டு அழகியும், நடிகையுமான பமீலா ஆண்டெர்சனின் படத்தை வெளியிட்டு, அத்தோடு முற்றிலும் நிர்வாணப் படங்களுக்கு முழுக்கு போடவுள்ளது.

இது குறித்து கடந்த வியாழக்கிழமை அந்நிறுவனம் வெளியிட்ட முன்னோட்ட புகைப்படத்தில், 48 வயதான பமீலா அரை நிர்வாணத்தில் கவர்ச்சியாகக் காட்சியளிக்கிறார்.

அந்தப் படத்திற்கு ஆண்கள் மத்தியில் இப்போதே பலத்த வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அது குறித்து பமீலாவிடம் செய்தியாளர்கள் கேட்க, அவரோ அடக்கமாக, “நான் அவ்வளவு அழகாக இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் எனக்குத் தெரியும் என்னிடம் ஆழமான கவர்ச்சியைத் தூண்டும் சமாச்சாரம் உள்ளது” என்று கண்சிமிட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

“மக்கள் அப்படத்திற்கு வெளிப்படையாக பலத்த ஆதரவு தருவதன் காரணம் உங்கள் உயிருக்கு எப்போதும் வயதாவதில்லை. நான் அதிகமாக வெளிப்படுத்தும் குணமுடையவள், மற்றும் எப்போதும் விளையாட்டுத்தனமும், வேடிக்கையும் கொண்டவள்” என்றும் பமீலா தெரிவித்துள்ளார்.

நிர்வாணப் படங்களை அட்டைப் படங்களாக வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளப் போவதாக கடந்த அக்டோபர் மாதம் பிளேபாய் இதழ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.