அம்னோவின் துணைத் தலைவரான மொகிதினுக்கு தனியாக கூட்டங்களை நடத்தவும், தனது ஆதரவாளர்கள் முன்பு உரையாற்றவும் உரிமை உள்ளதாக சாஹிட் தெரிவித்துள்ளார்.
“அது போன்ற கூட்டங்களை சட்டம் அனுமதிக்கின்றது. ஆனால் அம்னோவைப் பொறுத்தவரை கட்சியின் எல்லைகளைக் கடந்த கூட்டங்களை ஏற்பாடு செய்வது முறை கிடையாது. எனினும், தனது எண்ணங்களை வெளிப்படுத்த அவருக்கு (மொகிதின்) ஒரு தனி மேடை தேவைப்படுவதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.”
“அந்தக் கூட்டம் ‘சிலாத்துராகிம் (silaturrahim) என்ற ஊக்கத்தின் அடிப்படையில் நடத்தப்படவிருக்கின்றது. மாறாக, எந்த ஒரு தனி நபர் மீதும் தாக்குதல் நடத்தி, நமது நாட்டின் அரசியல் நிலமையை முற்றிலும் மாறுபட்ட கோணத்திற்கு திருப்பும் நோக்கில் அவர்கள் அந்த மேடையை பயன்படுத்தப் போவதில்லை.” என்று சாஹிட் தெரிவித்துள்ளார்.