Home Featured நாடு அம்னோவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான அனினாவின் மனு நிராகரிக்கப்பட்டது!

அம்னோவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான அனினாவின் மனு நிராகரிக்கப்பட்டது!

852
0
SHARE
Ad

Aninaகோலாலம்பூர் –  டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது வழக்குத் தொடுத்ததற்காக, தன்னை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்த அம்னோவின் முடிவிற்கு எதிராக அனினா சாடுடின் தாக்கல் செய்த மனுவை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று ஏற்க மறுத்தது.

தன்னை நீக்கிய கட்சியை எதிர்த்து வழக்குத் தொடுக்க அனினா தாக்கல் செய்திருந்த விண்ணப்பத்தை ஏற்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என நீதிபதி எஸ்.நந்தனா பாலன் தெரிவித்துள்ளார்.

சங்கங்களின் சட்டம் 1966 பிரிவு 18C, இந்த மனுவை ஏற்பதைத் தடுக்கிறது என்று கூறியுள்ள நீதிபதி, அனினாவிற்கு 5000 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளார்.

#TamilSchoolmychoice