Home Featured தமிழ் நாடு சென்னைவாசிகளே பாஸ்போர்ட் பற்றிய கவலையைவிடுங்கள் – சுஷ்மா புதிய அறிவிப்பு!

சென்னைவாசிகளே பாஸ்போர்ட் பற்றிய கவலையைவிடுங்கள் – சுஷ்மா புதிய அறிவிப்பு!

630
0
SHARE
Ad

sushmaசென்னை – சென்னைவாசிகள் வெள்ளப் பேரிடரில் சிக்கி பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். உயிர்கள், உடமைகள் என பலவும் வெள்ள நீரில் நாசமாகி உள்ள நிலையில், அடுத்த என்ன செய்வது என்கிற அவர்களின் துயரம் வார்த்தைகளில் சொல்லிமாளாது.

shushmaஅவர்களின் உடமைகளில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஆவணங்கள் தான். முக்கிய ஆவணங்கள் இழந்தவர்களை அரசு அலைக்கழிக்காமல் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடவுச் சீட்டு (Passport) தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “வெள்ளத்தினால் உங்களது கடவுச்சீட்டு சேதாரம் அடைந்து இருந்தாலோ அல்லது தொலைந்துபோய் இருந்தாலோ அதனை சென்னையில் இருக்கும் மூன்று ‘பாஸ்போர்ட் சேவா கேந்திரா’ (Passport Seva Kendra)-ல் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.