Home Featured நாடு “மகாதீர் பேச்சால் மிகவும் காயப்படுகிறேன்” – நஜிப் ஒப்புக் கொண்டார்!

“மகாதீர் பேச்சால் மிகவும் காயப்படுகிறேன்” – நஜிப் ஒப்புக் கொண்டார்!

561
0
SHARE
Ad

Najib 1MDBகோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், தனக்கு எதிராகப் பேசும் பல கருத்துகள் தன்னை மிகவும் பாதிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஒப்புக் கொண்டுள்ளார்.

என்னுடைய கொள்கைகளுக்கும், நிர்வாகத்திற்கும் எதிராக மகாதீர் விமர்சித்திருந்தால், நான் அதை ஏற்பேன் என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.

“ஆனால், எனது மிகவும் தனிப்பட்ட விவகாரங்களை அவர் விமர்சித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்” என்று நேற்று அம்னோ பொதுக்கூட்டம் தொடர்பாக டிவி3 அலைவரிசையில் நடைபெற்ற நேர்காணலில் நஜிப் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice