இந்நிலையில் சமீபத்தில் பேஸ்புக் பதிவு ஒன்றில், “சென்னை, வெள்ளத்தால் மூழ்கிக் கொண்டிருந்த சமயத்தில், திமுக சார்பில் அடுத்த முதல்வராக பிரகடனப்படுத்தப்படும் ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் கோவளத்தில் உள்ள சமுத்ரா ஐந்து நட்சத்திர விடுதியில் ஓய்வை கழித்துள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த பதிவில், ஸ்டாலின் வருகை தொடர்பாக மலையாள செய்தித்தாளில் இடம் பெற்றுள்ள செய்தியும் இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த 7-ம் தேதி, மங்களம் என்ற அந்த மலையாளப் பத்திரிக்கையில், ஸ்டாலின் குறித்து செய்திகள் வெளியாகின. குறிப்பிட்ட அந்த நட்சத்திர விடுதியில் ஸ்டாலின் மூன்று நாட்கள் தங்கியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த இரண்டு நாட்களாக திமுக சார்பில் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் பல்வேறு இடங்களில் நிவாரண உதவிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.