Home Featured நாடு கேஎல்ஐஏ -வில் நிற்கும் 3 விமானங்கள்: உரிமையாளர் யார் என்பது தெரிந்தது!

கேஎல்ஐஏ -வில் நிற்கும் 3 விமானங்கள்: உரிமையாளர் யார் என்பது தெரிந்தது!

634
0
SHARE
Ad

dcx_doc6ngqm2iratsu16q8mdzகோலாலம்பூர் – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கவனிப்பாரற்றுக் கிடந்த 3 போயிங் இரக விமானங்களைச் சொந்தம் கொண்டாடி ஒரு நிறுவனம் முன்வந்து, மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டை (எம்ஏஎச்பி) தொடர்பு கொண்டுள்ளது.

ஸ்விப்ட் ஏர் கார்கோ தலைமைச் செயல் அதிகாரி கேப்டன் புளூ பீட்டர்சன் இது குறித்து இன்று ஸ்டார் இணையதளத்திற்கு அளித்துள்ள தகவலில், கடந்த டிசம்பர் 7-ம் தேதி விளம்பரம் செய்யப்பட்ட அந்த மூன்று போயிங் 747 இரக விமானங்களும் தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தது என்று தெரிவித்துள்ளார்.

civilports081215கடந்த ஜூன் 8-ம் தேதி முதல் ஸ்விப்ட் ஏர் நிறுவனம் அந்த விமானங்களுக்கு உரிமையாளராக இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தற்போது விமானகளின் ஆவணங்கள், விற்பனைச் சான்றிதழ்கள் ஆகியவற்றைக் கொண்டு மலேசியா ஏர்போட் ஹோல்டிங்சை தாங்கள் அணுகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.