Home One Line P1 கேஎல்ஐஏ கணினி முறை: நாசவேலை எனில் தீவிரமாகப் பார்க்க வேண்டியுள்ளது!- காவல் துறை

கேஎல்ஐஏ கணினி முறை: நாசவேலை எனில் தீவிரமாகப் பார்க்க வேண்டியுள்ளது!- காவல் துறை

749
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் கணினி முறை அமைப்புக்கு எதிரான நாசவேலை குற்றச்சாட்டுகள் தீவிரமாகப் பார்க்க வேண்டியதொன்று என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தீங்கிழைக்கும் செயல்களில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட எவரும் கடுமையான தண்டனையை அனுபவிப்பார்கள் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

நாசவேலை என்று நிரூபிக்கப்பட்டால், காத்திருக்கும் தண்டனை மிகவும் கடுமையானது. இவ்வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது, பெறப்பட்ட அறிக்கைகள் ஒவ்வொரு கோணத்திலும் விசாரிக்கப்படும்என்றுஅவர்இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நேற்று செவ்வாய்க்கிழமை, மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்ஏஎச்பி) கடந்த வாரம் புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலும் கேஎல்ஐஏயில் ஏற்பட்ட கணினி முறை இடையூறு குறித்து காஅவ்ல் துறையில் அறிக்கையைப் பதிவு செய்தது.

தண்டனைச் சட்டம் பிரிவு 427-இன் கீழ், அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் அல்லது அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.