Home Slider ஐஎஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்த்த இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி கைது!

ஐஎஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்த்த இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி கைது!

501
0
SHARE
Ad

isis1ஜெய்பூர் – இந்தியாவில் இருந்து கொண்டே உலகை அச்சுறுத்தி வரும் தீவிரவாத இயக்கமான ஐஎஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்த்து வந்த இந்தியன் ஆயில் நிறுவன உயர் அதிகாரி நேற்று கைது செய்யப்பட்டார்.

ஜெய்ப்பூரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சந்தைப் பிரிவின் மேலாளராக பணிபுரிந்து வந்த சிராஜுதீன் என்பவர் பேஸ்புக் மற்றும் வாட்சாப் மூலமாக ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்காக இந்தியாவில் ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது வாட்சாப் மற்றும் பேஸ்புக் பக்கங்களை ஆய்வு செய்த காவல்துறையினர், ஐஎஸ் இயக்கத்துடன் அவர் தொடர்பு வைத்திருப்பதை உறுதி செய்தனர்.

அதனைத் தொடர்ந்து அவரது வீட்டை சோதனை செய்கையில், சில சந்தேகத்துக்குரிய பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஐஎஸ் இயக்கத்தின் இணைய பதிப்பான ‘தபீக்’ இதழ்கள் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

#TamilSchoolmychoice

இதனையடுத்து ராஜஸ்தான் காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.