Home Featured தமிழ் நாடு ஸ்டாலின் ஓய்வு குறித்த சர்ச்சை – திமுக தரப்பு விளக்கம்!

ஸ்டாலின் ஓய்வு குறித்த சர்ச்சை – திமுக தரப்பு விளக்கம்!

559
0
SHARE
Ad

satlinசென்னை – சென்னையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தபோது, முக.ஸ்டாலின் கேரளாவில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் என்ற செய்தி சமீபத்தில் ஊடகங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் இது தொடர்பாக திமுக தரப்பு பிரபல செய்தி நிறுவனம் ஒன்றில் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது.

திமுக அமைப்புச் செயலாளரான டி.கே.எஸ். இளங்கோவன் குறிப்பிட்ட அந்த ஊடகத்தின் வாயிலாக வெளியிட்டுள்ள விளக்கத்தில், “மூன்று மாதங்களுக்கென அமைக்கப்பட்டிருந்த புரோக்ராமை (நிகழ்வை) தமிழகத்தில் மழை – வெள்ளம் என்ற தகவலைக் கேட்டதும், மூன்றே நாட்களில் கேன்சல் (ரத்து) செய்து விட்டு தமிழகம் வந்து விட்டார். வந்ததோடு நிற்காமல், அதிகளவு வெள்ளம் பாதித்த பகுதிகளான திருவள்ளூர் மாவட்டத்துக்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளை தொடங்கி விட்டார்.”

திருவள்ளூரில் இருந்து கடலூருக்குப் போயிருக்கிறார். பின்னர் சொந்தத் தொகுதியான கொளத்தூருக்கு வந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். அடுத்தக்கட்டமாக சென்னை முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.