Home Slider சென்னை மக்களுக்காக ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி!

சென்னை மக்களுக்காக ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி!

638
0
SHARE
Ad

ar-rahman2சென்னை – சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மறுவாழ்விற்காக பல்வேறு பிரபலங்களும் தங்களால் ஆன முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இசையமைப்பாளர் இளையராஜா, நேரடியாக களத்தில் இறங்கி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறார். அவரின் முயற்சியால் பார்வையற்ற குழந்தைகள் பலர் பல்வேறு நிவாரணங்களைப் பெற்றதாக செய்திகள் வெளியாகின.

AR-rahmanஇந்நிலையில், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், வரும் ஜனவரி மாதம் 16-ம் தேதி, ‘நெஞ்சே எழு’ எனும் பெயரில் நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருப்பதாகவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதும் சென்னை மக்களின் மறுவாழ்விற்கு அளிக்க இருப்பதாகவும் டுவிட்டர் வாயிலாக அறிவித்துள்ளார்.