Home Featured கலையுலகம் அந்த ‘கெட்ட’ பாடலை பாடியது சிம்புவா? – இணையத்தில் பற்றி எரியும் சர்ச்சை!

அந்த ‘கெட்ட’ பாடலை பாடியது சிம்புவா? – இணையத்தில் பற்றி எரியும் சர்ச்சை!

1295
0
SHARE
Ad

anirudh-simbuசென்னை – சமீபத்தில் நட்பு ஊடகங்களில் நடிகர் கவுண்டமணி இளைஞர்களின் நடப்பு குறித்து கூறுவது போல் மீமீக்கள் உருவாக்கப்பட்டன. அதில் கடந்த சில நாட்களாக, சென்னை பேரிடர், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இளைஞர்கள் எழுச்சி என பேசப்பட்டதாகவும், தற்போது இளைஞர்களின் கவனம் முழுவதும் சிம்புவின் ‘பீப் சாங்’ (Beep Song) பக்கம் திரும்பி விட்டதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

சிம்பு குறித்து கடந்த சில மாதங்களாக எவ்வித செய்திகளும் வெளியாகாமல் இருந்த நிலையில், திடீரென புதிய பரபரப்பில் சிக்கி விட்டாரோ? என தோன்றியது. அதனை தொடர்ந்து நாம் கூகுள் செய்ததில், ஆம் வகையாக சிக்கி விட்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. வழக்கமாக நடிகைகளுடன் பரபரப்பாக கிசுகிசுக்கப்படும் சிம்பு, தற்போது இசையமைப்பாளர் அனிரூத்துடன் சிக்கிக் கொண்டுள்ளார்.

‘பீப் சாங்’ என்ற ஒரு பாடலை அனிரூத் இசையமைப்பில் சிம்பு பாடியுள்ளதாகவும், அவர்களுக்கே தெரியாமல் அந்த பாடல் தற்போது வெளியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. வழக்கமாக தமிழ் சினிமாவில் இத்தகைய திருட்டு, வாடிக்கை தான் என்றாலும் இது சற்று புதியது தான். சினிமாவில் தவறான வார்த்தைகள், சர்ச்சையை கிளப்பும் வார்த்தைகள் இருந்தால் அவற்றை மறைக்க ‘பீப்’ ஒலி உருவாக்கப்படும்.

#TamilSchoolmychoice

simbuஇங்கு அந்த பாடல் முழுவதும் பீப் ஒலி பரவலாக இடம் பெறுகிறது. அத்தனையும் இழிவான வார்த்தைகள் தான். முக்கியமாக பெண்களை இழிவு படுத்தும், அந்த வார்த்தைகள் பீப் ஒலி கொண்டு மறைத்து உருவாக்கப்பட்டிருந்தாலும், திட்டமிட்டே அது என்ன சொல் என்று தெரிகிற மாதிரியும் வைத்திருக்கிறார்கள்.

இந்த பாடலை சிம்பு-அனிரூத் உருவாக்கினார்களா? இல்லையா? என்பது தெரியவில்லை. எனினும், அந்தப்பாடலில் உள்ள குரல் சிம்புவுடையது போலவே இருக்கிறது. இது தொடர்பாக சிம்புவோ-அனிரூத்தோ இதுவரை வாய்திறக்கவில்லை. ஆனால் ஊடகங்களில் கண்டனக் குரல்கள் பற்றி எரிகிறது. இதற்கு மேல் பெண்களை மோசமாக சித்தரிக்க முடியாது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே ஒரு சாரார், சிம்பு ஹன்சிகாவுடனான காதல் தோல்விக்கு பிறகு அவரை மனதில் வைத்து இந்த பாடலை உருவாக்கி உள்ளதாகவும் கூறி சர்ச்சையை மேலும் வளர்க்கின்றனர்.

‘அந்த’ பாடலை  கீழே காண்க:

https://www.youtube.com/watch?v=zH9PcXmXkjk