வாரணாசி – இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே நரேந்திர மோடியின் அடுத்த கனவுத் திட்டமான புல்லட் இரயில் எனப்படும் அதிவேக விரைவு இரயில் திட்டம் இந்தியாவுக்குள் வருவதற்கு வித்திட்டுள்ளார்.
மும்பாய்-அகமதாபாத் நகர்களுக்கு இடையிலான முதல் புல்லட் இரயிலை அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயும், கையெழுத்திட்டுள்ளனர்.
தனது வருகையின் ஒரு பகுதியாக இன்று நரேந்திர மோடியுடன் ஷின்சோ அபே வாரணாசி நகருக்கு வருகை தந்து அங்கு கங்கைக் கரையில் வண்ணமயமான விளக்குகளுடன் நடைபெறும் பிரபலமான கங்கா ஆர்த்தி எனப்படும் தீபாராதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஷின்சோ அபேயின் வருகையை முன்னிட்டு இன்று வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட கங்கைக் கரை – கங்கா ஆர்த்தி நிகழ்ச்சியின் போது…
இன்று கங்கைக் கரையில் பிரபலமான கங்கா ஆர்த்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே, மோடியுடன் வருகை தருவதை முன்னிட்டு, வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ள கங்கைக் கரைப் பகுதி