Home Featured கலையுலகம் ‘பீப்’ பாடல் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாம் – சிம்பு-அனிரூத் தரப்பு விளக்கம்!

‘பீப்’ பாடல் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாம் – சிம்பு-அனிரூத் தரப்பு விளக்கம்!

631
0
SHARE
Ad

simbu_anirudhசென்னை – சிம்பு-அனிரூத் இருவரும் இணைந்து உருவாக்கிய பீப் பாடல், இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிக் கொண்டு இருக்கும் நிலையில், அவர்கள் இருவர் மீதும் கோவை மாதர் சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை ஜாமீனில் வெளிவரமுடியாத படி, 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிம்பு-அனிரூத் சார்பாக அவர்களின் வழக்கறிஞர் சி.ராஜசேகரன் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “வாட்சாப், யூ-டியூப் எனப் பல்வேறு வடிகால்களின் வாயிலாக இணையத்தில் தற்போது பரவலாக உலவி வரும் ’பீப் சாங்’ (Beep Song) என்ற பாடலின் வரிகள் அதிகாரப்பூர்வமான பாடல் வரிகள் அல்ல. மேலும் இவ்வரிகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவதை அறிந்து எனது கட்சிக்காரர்கள் சிலம்பரசன் மற்றும் அனிரூத் ஆகியோர் அதிர்ந்து போயுள்ளனர்.”

#TamilSchoolmychoice

“எனது கட்சிக்காரர்களின் மீது மக்கள் வைத்திருக்கும் மதிப்பையும், நற்பெயரையும் தகர்க்க வேண்டும் என்ற தீயநோக்கோடும், தவறான எண்ணத்தோடும் சில விஷமிகள் இந்தப் பாடலை இணையத்தில் கசிய விட்டிருக்கிறார்கள் என்பது என் கட்சிக்காரர்களின் வலுவான அபிப்பிராயம் ஆகும். இது குறித்து, இணையத்தில் உலவி வரும் இந்தப் பாடல் பதிவேற்றப்பட்ட மூலத்தையும் அதன் அதிகாரத்தையும் ஆராய்ந்து, கண்டறிந்து, சட்டப்படி அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, என் கட்சிக்காரர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.”

“மேலும், நடிகர் சிலம்பரசன் ஒரு இசைப்பிரியர் ஆவார். அவர் பல்வேறு பாடல்களைத் தன் சொந்தப் பயன்பாட்டிற்காக ஒலிப்பதிவு செய்துள்ளார். இவையாவும், அதிகாரப்பூர்வமற்ற, திருத்தப்படாத முதல்படிவ நிலையிலேயே உள்ளன. இவை நூறு விழுக்காடு அவரது தனிப்பட்டச் சொத்தாகும். அவரது தனிப்பட்டச் சொத்துகளிலோ, அந்தரங்கத்திலோ தலையிடுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை. மேலும் அவ்வாறு செய்வது சட்டப்படி, தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும்” என்று கூறியுள்ளார்.