Home Slider பாரிஸ் பருவநிலை மாநாடு: ஒபாமா பெருமிதம்!

பாரிஸ் பருவநிலை மாநாடு: ஒபாமா பெருமிதம்!

558
0
SHARE
Ad

paris1பாரிஸ் – புவி வெப்பமடைவதை தடுப்பதற்காக பாரிசில் ஒன்று கூறிய உலக நாடுகளின் பிரதிநிதிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்றி உள்ளனர். அந்த ஒப்பந்தத்தின் படி, புவி வெப்பமயமாதலை தடுக்க, 2020-ம் ஆண்டில் இருந்து ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் நிதி திரட்ட வேண்டும் என உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

paris-climate-summitஅதுமட்டுமல்லாமல் வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் புவி சார்ந்து மேற்கொள்ள வேண்டிய பல்வேறு கொள்கைகளும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமக்கென இருக்கும் ஒரே கிரகமான பூமியை காப்பாற்ற மிகச் சிறந்த வாய்ப்பாக பாரிஸ் ஒப்பந்தம் அமைந்துள்ளது. இந்த தருணம் உலகின் திருப்புமுனையாக அமையும் என நான் நம்புகிறேன். இந்த பருவநிலை ஒப்பந்தத்தின் விளைவாக பூமி நல்லநிலையில் இருக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொள்ளலாம்” என்று அவர் கூறியுள்ளார்.