Home Featured தமிழ் நாடு “என் கையில் எந்த சிவப்புக் கயிறும் கிடையாது” – கருணாநிதி விளக்கம்!

“என் கையில் எந்த சிவப்புக் கயிறும் கிடையாது” – கருணாநிதி விளக்கம்!

641
0
SHARE
Ad

karuna1சென்னை – திமுக தலைவர் கருணாநிதி, கையில் ஆந்திர மாநில தர்காவில் இருந்து மந்திரித்துக் கொண்டு வரப்பட்ட சிவப்புக் கயிறை கட்டி இருக்கிறார் என பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்ததால், பல்வேறு ஊடகங்களில் அந்த செய்தி பரவியது. இது குறித்து கருணாநிதி, தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது கையில் கயிறு இருப்பதாக வெளியட்டுள்ள செய்தி, குறிப்பிட்ட ஒரு நாளிதழ், வெளியிடும் புளுகளில் ஒன்று என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,  “வேலூரில் உள்ள பிரபல மடாதிபதி அறிவுரையைக் கேட்டு, சிவப்பு நிற பட்டையுடன் கூடிய, கைக்கடிகாரத்தை கருணாநிதி அணிந்துள்ளார். இக்கடிகாரத்தை சிறப்பு பூஜை செய்து அணிந்துள்ளார் என்று வெளியிட்டதோடு, யார் யாரையோ ஜோதிடர்களை யெல்லாம் சந்தித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றெல்லாம் வெளியிட்டிருந்தது.”

“அதே நாளேடு, இன்று அந்தச் செய்தியில் மாற்றம் செய்து, திமுக தலைவர் கருணாநிதி, தன் இடது கையில் ஒரு வாரமாக சிவப்பு பட்டையுடன் கூடிய கைக்கடிகாரத்துடன், ஆந்திர மாநில தர்காவில் இருந்து வந்த மந்திரிக்கப்பட்ட சிவப்பு கயிறையும் சேர்த்துக் கட்டியிருப்பதாகவும், அதைப் பற்றி திமுக வட்டாரங்கள் கருத்து கூறியதாகவும் வெளியிட்டுள்ளது.”

#TamilSchoolmychoice

“என் கையில் எந்தக் சிவப்பு கயிறும் கிடையாது. கையிலே உள்ள சிவப்பு நிறப் பட்டையுடன் கூடிய கைக்கடிகாரம், நான் ஓராண்டிற்கு மேலாக கையிலே அணிந்திருக்கும் அதே கடிகாரம் தான்! அதற்கும் எந்த முக்கியத்துவம் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.