Home Featured உலகம் மீண்டும் மீண்டும் சூறாவளியில் சிக்கும் பிலிப்பைன்ஸ் – 7 லட்சம் மக்கள் வெளியேற்றம்!

மீண்டும் மீண்டும் சூறாவளியில் சிக்கும் பிலிப்பைன்ஸ் – 7 லட்சம் மக்கள் வெளியேற்றம்!

525
0
SHARE
Ad

melor-626553மணிலா – ‘மெலார்’ (Melor) என்று அழைக்கப்படும் சூறாவளி, தற்போது ஒட்டுமொத்த பிலிப்பைன்சையும் ஆக்கிரமிக்க இருக்கிறது. மணிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய இந்த சூறாவளியை, வானிலை ஆராய்ச்சியாளர்கள் கேடக்ரி 4 (Category 4) என்று குறிப்பிடுகின்றனர். ஏறக்குறைய பிலிப்பைன்சின் 20 மாகாணங்களில் கடுமையான புயல்காற்றுடன், சுமார் 12 அங்குலம் வரையிலான கனமழையும் பெய்யும் என்றும், இதன் காரணமாக பெரும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மத்திய பிலிப்பைன்சில் இருந்து சுமார் 7 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், தற்காலிகமாக விமான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

பிலிப்பைன்சில் கடந்த 2013-ம் ஆண்டு, ஹயான் என்ற புயல் தாக்கியது. இந்த தாக்குதலில் சுமார் 8 ஆயிரம் பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒவ்வொரு புயலின் போதும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

அங்கு ஆண்டுதோறும் சுமார் 20 புயல் தாக்குதல் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.