Home Featured கலையுலகம் “வழக்கை எதிர்கொள்ள நான் தயார்” – சிம்பு அறிவிப்பு!

“வழக்கை எதிர்கொள்ள நான் தயார்” – சிம்பு அறிவிப்பு!

588
0
SHARE
Ad

strசென்னை – ‘பீப்’ பாடல் தொடர்பாக தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில், கோவை மாதர் சங்கத்தினர் சிம்பு மற்றும் அனிரூத் மீது 3 பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக மௌனம் காத்து வந்த சிம்பு, நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், “சட்ட ரீதியிலான வழக்குகளை எதிர்கொள்ள தயார். இங்கு மறைப்பதற்கும், ஒளிவதற்கும் ஒன்றும் இல்லை. எனக்கு கடவுள் மீது நம்பிக்கை உள்ளது. அவர் பார்த்துக் கொள்வார். ஒருமைப்பாடு மற்றும் உண்மையில் மிகுந்த நம்பிக்கை உள்ளது. கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.