Home Featured உலகம் தீவிரவாத மிரட்டல் – லாஸ் ஏஞ்சல்ஸ் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன!

தீவிரவாத மிரட்டல் – லாஸ் ஏஞ்சல்ஸ் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன!

557
0
SHARE
Ad

lasலாஸ் ஏஞ்சல்ஸ் – அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள பள்ளிகளுக்கு, மின்னஞ்சல் மூலம் தீவிரவாத மிரட்டல் விடுக்கப்பட்டதால், நேற்று அங்குள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. சமீபத்தில், கலிஃபோர்னியாவின் சான் பெர்னார்டினோவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை விட கொடூரமான தாக்குதல் நிகழ்த்தப்படும் என அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டு இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை, விசாரித்து வரும் நிலையில், அதே மின்னஞ்சல் நியூ யார்க் நகர அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அதிகாரிகள் உடனடியாக அதனை புரளி என்று கண்டுபிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.