Home Featured கலையுலகம் இன்று முதல் எந்திரன் 2 – இயக்குனர் ஷங்கர் அறிவிப்பு!

இன்று முதல் எந்திரன் 2 – இயக்குனர் ஷங்கர் அறிவிப்பு!

492
0
SHARE
Ad

ENDHIRAN-21சென்னை – இந்திய சினிமாவின் பிரம்மாண்டக் கூட்டணியான ரஜினி-ஷங்கர் மீண்டும் இணைந்து எந்திரன் 2-வை உருவாக்க இருக்கிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் பிரம்மாண்டப் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை, இயக்குனர் ஷங்கர், நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, இப்படத்தில் ரஜினி-ஷங்கருடன், ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்டும் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகின. அவருக்கு ரூபாய் 100 கோடி சம்பளமாக பேசப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது, அர்னால்ட் எந்திரன் 2-ல் இல்லை என்று தயாரிப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

அர்னால்ட்டிற்கு பதிலாக ‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ், ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.