Home Featured இந்தியா ஏர் இந்தியா பொறியாளர் பலியான சம்பவம்: விசாரணைக் குழு அமைக்கப்பட்டது! 

ஏர் இந்தியா பொறியாளர் பலியான சம்பவம்: விசாரணைக் குழு அமைக்கப்பட்டது! 

497
0
SHARE
Ad

air-india-rமும்பை – மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில், கடந்த செவ்வாய்க் கிழமை இரவு, ‘ஏர் இந்தியா – 619’ விமானத்தின் இயந்திர சக்கரத்தால் உறிஞ்சி உள்ளே இழுக்கப்பட்டு உயிரிழந்த பொறியாளர் ரவி சுப்ரமணியனின்(படம்) குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் மகேஷ் ஷர்மா, கவனக்குறைவால் நடந்த இந்த விபத்து குறித்து விசாரிக்க, ஏர் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அஸ்வனி லோஹானி தலைமையில், விசாரணைக் குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.