Home Featured கலையுலகம் சிம்புவிற்கு காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

சிம்புவிற்கு காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

604
0
SHARE
Ad

simbu- chennai high courtசென்னை – பீப் பாடல் தொடர்பாக கோவை காவல்துறை, நடிகர் சிம்புவிற்கு அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும் என சிம்பு தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தது. இந்த மனு மீது இன்று நடத்தப்பட்ட விசாரணையில், காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனால் நாளை (19-ம் தேதி) நடிகர் சிம்பு, கோவை காவல்துறையிடம் கட்டாயம் ஆஜராக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.