Home Featured நாடு “டிசம்பர் 19 வேட்புமனுத்தாக்கல் : நாம் முன்னோக்கிப் பயணிப்பதற்கான அடுத்தக் கட்ட வாய்ப்பாகும்”

“டிசம்பர் 19 வேட்புமனுத்தாக்கல் : நாம் முன்னோக்கிப் பயணிப்பதற்கான அடுத்தக் கட்ட வாய்ப்பாகும்”

567
0
SHARE
Ad

V.S.Mohan_கோலாலம்பூர் – “நாளை சனிக்கிழமை டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் மஇகாவுக்கு வெளியே இருக்கும் கிளைகளுக்கான வேட்புமனுத்தாக்கல் ம.இ.காவின் எதிர்காலத்திற்கும் இந்திய சமுதாயத்தின் நலனிற்கும் எவ்வளவு முக்கியம் என்பதை ம.இ.கா உறுப்பினர்கள் அனைவரும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இந்த வேட்புமனுத்தாக்கல் ம.இ.காவில் ஒற்றுமையை வலுப்பெற செய்வதற்கும், அடிமட்ட உறுப்பினர்களுக்கும், உயர்மட்ட தலைவர்களுக்கும் இடையில் பரஸ்பர உறவினை மேம்படுத்துவதற்கும், ம.இ.காவிற்கும் இந்திய சமூகத்திற்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கும் கிடைத்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பாகும்” என மஇகா தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன் தெரிவித்துள்ளார்.

subraம.இ.காவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தலைமையில் எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி ம.இ.காவிலிருந்து வெளியில் இருக்கக்கூடிய கிளைகளை மீண்டும் கட்சிக்குள் இணைக்கும் பொருட்டு வேட்புமனுத் தாக்கல் நடைபெறவுள்ளது.

“டாக்டர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெறும் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்வதன் வழி ம.இ.காவின் அடிப்படை சட்டத்திட்டங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். டாக்டர் சுப்ரா ஆரம்பத்திலிருந்தே ம.இ.கா, சங்கப் பதிவகம் (ஆர்.ஓ.எஸ்), நீதிமன்றம் என அனைத்துத் தரப்புச் சட்டத் திட்டங்களைப் பின்பற்றி அதன் அடிப்படையில் ம.இ.கா மறுத்தேர்தலை நடத்தியுள்ளார். இதன்வழி ம.இ.காவில் நாம் புதிய மலர்ச்சியைக் காண முடிகின்றது. அதன் அடிப்படையில் கட்சிக்கு வெளியில் இருக்கக்கூடிய கிளைகள் மீண்டும் கட்சிக்குள் ஒன்றிணைந்து செயல்படும் பொருட்டு நடைபெறவிருக்கும் இந்த வேட்புமனுத்தாக்கலில் சம்பந்தப்பட்ட கிளைத் தலைவர்கள் தங்களது வேட்புமனுத்தாக்கலைச் சமர்ப்பிக்க வேண்டும்” என்றும் மோகன் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

வேட்புமனுத் தாக்கலை சீர்குலைக்கும் முயற்சிகள்

MIC-Logo-Slider“இந்த வேட்புமனுத் தாக்கலைத் தடுக்கும் பொருட்டும், ம.இ.கா தேசியத் தலைவர் தலைமையில் சீர் கண்டு வரும் ம.இ.கா கட்சியின் பெயரை மீண்டும் சீர்குலைக்கும் வண்ணம் ஒரு சில தரப்பினர் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுடைய இந்தப் பிற்போக்குச் சிந்தனையில் வீழ்ந்திடாது கட்சியின் நலன் கருதியும் சமுதாயத்தின் எதிர்காலத்தை மனத்தில் கொண்டும் கிளைத் தலைவர்கள் செயல்பட வேண்டும். வேறுபாடுகளைக் களைந்து, பிரச்சனைகளைச் சுமுகமாகத் தீர்க்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்கிக் கொண்டு, நாம் முன்னோக்கிப் பயணிக்கக்கூடிய பாதையை வகுக்க வேண்டும். ஏனென்றால், நாட்டின் 14வது பொதுத்தேர்தல் கூடிய விரைவில் வரவிருக்கின்றது” என்பதை நினைவுபடுத்தியுள்ள மோகன்,

“அதேநேரத்தில் நம் சமுதாயத்தின் பிரச்சனைகளும், அதனை நாம் தீர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருக்கின்றன. இத்தகைய காலக்கட்டத்தில், நாம் நம்முடைய பிரச்சனையிலேயே சிக்கிக் கொண்டிருந்தால், சமுதாயத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய முடியாமல் போய்விடும். பொதுத்தேர்தலுக்கு தயார் செய்யக்கூடிய முயற்சிக்கு நாமே முட்டுக்கட்டையாக இருந்தோமென்றால் பிரச்சனைகளை எதிர்நோக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுவிடும்” என்றும் எச்சரித்துள்ளார்.

“எனவே, குறிப்பிட்ட நாளில் வேட்புமனுத்தாக்கல் செய்யாமல் பின்வாங்கி சமுதாய சீரழிவுக்கு நாமே காரணமாகி விடக்கூடாது. இந்த வேட்புமனுத்தாக்கலின் வழியாகவே ம.இ.கா ஒற்றுமை இன்னும் குறையவில்லை என்பதை உறுப்பினர்களாகிய நாம் நிரூபிக்க முடியும். அதுவே நமது கடமையும் ஆகும்” என்றும் மோகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.