Home Featured கலையுலகம் ஷாருக்கானின் ‘தில்வாலே’ படத்திற்கு கடும் எதிர்ப்பு!

ஷாருக்கானின் ‘தில்வாலே’ படத்திற்கு கடும் எதிர்ப்பு!

620
0
SHARE
Ad

dilwaleஜபல்பூர் – மிக நீண்ட வருடங்களுக்கு பிறகு ஷாருக் கான், கஜோல் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் ‘தில்வாலே’ படத்திற்கு, பாஜக, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், படம் திரையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் மத சகிப்புத்தன்மை குறித்து ஷாருக்கான் கடந்த மாதம் கருத்து தெரிவித்து இருந்தார். அதனை மனதில் வைத்தே இந்த போராட்டங்கள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. முன்னதாக ‘தில்வாலே’ படத்திற்கான விளம்பர நிகழ்ச்சியின் போது ஷாருக்கான், தனது கருத்திற்காக மன்னிப்பு கோரி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.