Home Featured இந்தியா சோனியா-ராகுல் நீதிமன்றத்தில் பிணை கோருவார்கள்!

சோனியா-ராகுல் நீதிமன்றத்தில் பிணை கோருவார்கள்!

744
0
SHARE
Ad

புதுடில்லி – இந்திய அரசியலையே ஒரு கலக்குக் கலக்கியுள்ள நேஷனல் ஹெரால்ட் வழக்கில் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவிருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் பிணை (ஜாமீன்) கோருவார்கள் என காங்கிரஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்தியத் தகவல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

soniarahulseriousசோனியாவும், ராகுலும் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனம் ஒன்று அதிக மதிப்புடைய சொத்து ஒன்றை குறைந்த விலைக்குத் தங்களுக்கு மாற்றிக் கொண்டதைத் தொடர்ந்து, பாஜக தலைவர் சுப்ரமணியம் சுவாமி  வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அடிப்படையில் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு ஆதாரம் இருக்கின்றது என்று கூறி சோனியா, ராகுல் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

#TamilSchoolmychoice

இன்று நீதிமன்றத்திற்கு சுப்ரமணிய சுவாமியும் வருகை தருவார் என்பதால், புதுடில்லி அரசியல் வட்டாரங்களும், தகவல் ஊடகங்களும் மிகுந்த பரபரப்பில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.