Home Featured வணிகம் டைம்ஸ் ஸ்குவேர் வணிக மையத்தின் 20% பங்குகளை 250 மில்லியன் ரிங்கிட்டுக்கு ஜோகூர் சுல்தான் விற்றார்!

டைம்ஸ் ஸ்குவேர் வணிக மையத்தின் 20% பங்குகளை 250 மில்லியன் ரிங்கிட்டுக்கு ஜோகூர் சுல்தான் விற்றார்!

777
0
SHARE
Ad

BerjayaTimesSquare-Mallகோலாலம்பூர் – இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜோகூர் சுல்தானாகிய சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மாஹ்ரும் சுல்தான் இஸ்கண்டார் தலைநகரின் பிரபல வணிக மையமான டைம்ஸ் ஸ்குவேர் நிறுவனத்தில் 20 சதவீதப் பங்குகளை 250 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கியிருந்தார். தற்போது அந்த பங்குகளை மீண்டும் பெர்ஜெயா அசெட்ஸ் (Berjaya Assets Bhd) நிறுவனத்திற்கே, அதே 250 மில்லியன் ரிங்கிட் விலையில் விற்றுள்ளார்.

Johor Sultanஇந்தப் பங்குகள் பெர்ஜெயா டைம்ஸ் ஸ்குவேர் சென்டிரியான் பெர்ஹாட் என்ற நிறுவனத்தின் பங்குகளாகும். இந்த நிறுவனம்தான் தலைநகர் இம்பி சாலையில் உள்ள டைம்ஸ் ஸ்குவேர் வணிக வளாகத்தை நிர்வகித்து வருகின்றது.

இந்த 20 சதவீதம் என்பது 150 மில்லியன் பங்குகளைக் கொண்டதாகும். ஏறத்தாழ 1.67 ரிங்கிட் விலைக்கு இந்தப் பங்கு பரிமாற்றம் நடைபெற்றிருக்கின்றது. இதன் மூலம் பெர்ஜெயா டைம்ஸ் ஸ்குவேர் நிறுவனத்தின் 100 சதவீத உரிமையை பெர்ஜெயா அசெட்ஸ் நிறுவனம் மீண்டும் பெற்றிருக்கின்றது.

#TamilSchoolmychoice

பெர்ஜெயா குழும நிறுவனங்கள் மலேசியாவின் பிரபல கோடீஸ்வரர் டான்ஸ்ரீ வின்சென்ட் டான் மற்றும் அவரது குடும்பத்தாரால் நிர்வகிக்கப்படுபவையாகும்.