Home Featured நாடு ‘டத்தோஸ்ரீ’ பட்டத்துடன் சில குற்றவாளிகள் – சாஹிட் ஆவேசம்!

‘டத்தோஸ்ரீ’ பட்டத்துடன் சில குற்றவாளிகள் – சாஹிட் ஆவேசம்!

511
0
SHARE
Ad

Ahmad-Zahid-Hamidiமிரி – நாட்டில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் தொழிலாளர்களைக் கொண்டு வரும் முகவர்கள் மற்றும் கும்பல்களை குடிநுழைவுத்துறை அதிகாரிகளும், காவல்துறையினர் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

காவல்துறை கள்ளக் குடியேறிகளைப் பிடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கக் கூடாது, மாறாக அவர்களைப் பயன்படுத்தி தங்களை வளப்படுத்திக் கொள்ளும் நபர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சாஹிட் தெரிவித்துள்ளார்.

“மலேசியாவில் மனிதக் கடத்தல் செய்பவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள், சட்டத்திற்குப் புறம்பான வகையில் தங்கியிருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அல்ல”

#TamilSchoolmychoice

“ஏழைத் தொழிலாளர்கள் இதில் பலிகடாவாக்கப்படுகின்றார்கள்”

“வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மூலம் பயனடையும் முகவர்களும், கும்பல்களும் தான் இதில் உண்மையான குற்றவாளிகள். வெளிநாட்டுத் தொழிலாளர்களின் கடவுச்சீட்டை வைத்துக் கொண்டு, அவர்களைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுகின்றார்கள். அவர்களில் சிலர் ‘டத்தோஸ்ரீ’ பட்டம் கூட வைத்திருக்கிறார்கள்” என்று சரவாக்கில் இன்று நடைபெற்ற தேசிய அளவிலான குடிநுழைவு தினம் 2015 நிகழ்ச்சியில் பேசிய சாஹிட் தெரிவித்துள்ளார்.