Home Featured இந்தியா டெல்லி நிர்பயா வழக்கு: இளம் குற்றவாளி ரகசிய இடத்தில் விடுவிப்பு!

டெல்லி நிர்பயா வழக்கு: இளம் குற்றவாளி ரகசிய இடத்தில் விடுவிப்பு!

934
0
SHARE
Ad

minorபுது டெல்லி – கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஓடும் பேருந்தில் வைத்து மருத்துவ மாணவி, 6 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், ‘மைனர்’ குற்றவாளி இன்று ரகசிய இடத்தில் விடுவிக்கப்பட்டதாக உறுதிபடுத்தப்பட்ட செய்திகள் வெளியாகி உள்ளன.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று அவன், சிறார் இல்லத்தில் இருந்து இன்று ரகசிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவன் சுதந்திரமாக வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த சிறுவனின் மறுவாழ்விற்காக, அவனுக்கு 10 ஆயிரம் ரூபாய் கடனுதவியும், ஒரு தையல் இயந்திரமும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 20 வயதாகும் அவனுக்கு பல்வேறு இயக்கங்கள் மூலமாக பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.