பீப் பாடல் தொடர்பாக சிம்பு இன்று அளித்துள்ள பேட்டியில், குறிப்பிட்ட அந்த பாடலை தான் எந்த படத்திலோ அல்லது தனித்த பாடல் தொகுப்பிலோ அறிமுகப்படுத்தவில்லை என்றும், யாரோ விஷமிகள் தன்னிடம் இருந்து இந்த பாடலை திருடி வெளியிட்டு, பெண்கள் மத்தியில் தனக்கு இருக்கும் நன்மதிப்பை கெடுக்க முயற்சித்து இருப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும் அவர், “ஒரு பாட்டுல வெட்றா அவள, குத்துறா அவளங்கறான்..அதுக்கலாம் யாரும் கேள்வி கேக்கல..பெண்களுக்கு ஆதரவாக பாட்டு எழுதுன என்ன கேள்வி கேளுங்க” என்று கூறியது தனுஷ் ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.
தனுஷ் ‘மயக்கம் என்ன’ படத்தில், ‘அடி டா அவள ஓத டா அவள’ என பாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.