Home Featured உலகம் தவறான அறிவிப்பு: நிமிடத்தில் கைமாறிப் போன உலக அழகிப் பட்டம்!

தவறான அறிவிப்பு: நிமிடத்தில் கைமாறிப் போன உலக அழகிப் பட்டம்!

1029
0
SHARE
Ad

2F8AA61D00000578-3368439-image-m-134_1450673332295லாஸ் வேகாஸ் – உலக அழகிப் போட்டி 2015- ன் கடைசி பரபரப்பு நிமிடங்களில் அறிவிப்பாளர் ஸ்டீவ் ஹார்வே செய்த தவறான அறிவிப்பால், கொலம்பியா அழகி அரியட்னா கூடிரர்சுக்கு உலக அழகிப் பட்டம் சூட்டப்பட்டது.

தான் உலக அழகியாகிவிட்டோம் என்ற உச்சக்கட்ட சந்தோஷத்தில் அரியட்னா மிதந்து கொண்டிருக்க, அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென தான் தவறுதலாக ‘மிஸ் கொலம்பியா’ என்று அறிவித்துவிட்டதாக ஸ்டீவ் ஹார்வே மன்னிப்புக் கேட்டார்.

#TamilSchoolmychoice

பிலிப்பைன்ஸ் அழகி பியா அலோன்சோ வோட்ர்ஸ்பேக்  தான், உலக அழகி என்று கூறி அவர் தனது கையில் இருந்த அட்டையைக் காட்டியதும், அரங்கத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தனது தவறுக்கு அறிவிப்பாளர் தார்மீக பொறுப்பேற்று மன்னிப்பு கூறினார்.

இதனால் அங்கு சற்று நேரமும் குழப்பமும், சலசலப்பும் ஏற்பட்டது.

2F8ADA4100000578-3368439-image-a-200_1450679643013இந்நிலையில், அறிவிப்பாளர் அவ்வாறு தவறாக அறிவித்தற்கான உண்மையான காரணம் என்னவென்று விரைவில் தகவல்கள் வெளியாகலாம் என நம்பப்படுகின்றது.