Home Featured நாடு தாமான் ஜெயா எல்ஆர்டி-ல் தீ விபத்து – குண்டுவெடிப்பு அல்ல!

தாமான் ஜெயா எல்ஆர்டி-ல் தீ விபத்து – குண்டுவெடிப்பு அல்ல!

962
0
SHARE
Ad

20151220232517பெட்டாலிங் ஜெயா இன்று மதியம் 1 மணியளவில் பெட்டாலிங் ஜெயா தாமான் ஜெயா எல்ஆர்டி நிலையத்திலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் கார் ஒன்றில் ஏற்பட்ட தீ, அருகே இருந்த கார்களுக்கும் பரவியது.

இச்சம்பவத்தில் இரண்டு கார்கள் தீயில் முற்றிலும் அழிந்த நிலையில், மேலும் 4 கார்கள் தீப்பற்றி எரிந்தன.

20151220232517 (3)இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் 1.32 மணியளவில் தீயை அணைத்தனர் என்று சினார் ஹரியான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

#TamilSchoolmychoice

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ, உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

20151220232517 (1)இதனிடையே, இச்சம்பவத்தின் புகைப்படங்களை நட்பு ஊடகங்களின் வழி பகிர்ந்த சிலர், இச்சம்பவத்திற்கு வெடிகுண்டு தான் காரணம் எனக் கூறி வருகின்றனர்.