Home Slider கைது பயம்: முன் ஜாமீன் கோரினார் சிம்பு!

கைது பயம்: முன் ஜாமீன் கோரினார் சிம்பு!

588
0
SHARE
Ad

simbu- chennai high courtசென்னை – ‘பீப்’ பாடல் காரணமாக தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில், சென்னை, கோவை என பல்வேறு இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கோவை மாதர் சங்கம் ஏற்கனவே சிம்பு-அனிரூத் மீது 3 வழக்குகள் பதிவு செய்துள்ளதால், கோவை காவல்துறையினர் சிம்பு-அனிரூதிற்கு இருமுறை சம்மன் அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் சிம்பு தரப்பில் கைது நடவடிக்கையை தவிர்க்கும் நோக்கத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை (22-12-2015) விசாரணைக்கு வருகிறது.