Home Featured நாடு 6 கார்கள் எரிந்த சம்பவம்: ஆடவர் வீசிய பெட்ரோல் குண்டு தான் காரணம்!

6 கார்கள் எரிந்த சம்பவம்: ஆடவர் வீசிய பெட்ரோல் குண்டு தான் காரணம்!

635
0
SHARE
Ad

20151220232517 (1)பெட்டாலிங் ஜெயா – தாமான் ஜெயா எல்ஆர்டி வாகன நிறுத்துமிடத்தில் இன்று மதியம் ஏற்பட்ட கார் தீ சம்பவத்திற்குக் காரணம் பழிவாங்கல் முயற்சி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விவாகரத்தை எதிர்நோக்கியிருக்கும் கணவன், தனது மனைவியின் காரை நோக்கி பெட்ரோல் குண்டை வீசியதால், அந்தக் கார் முற்றிலும் எரிந்ததோடு, அருகில் நிறுத்தப்பட்டிருந்த 5 கார்களும் தீக்கிரையாகியுள்ளதாக விசாரணைக்குப் பிறகு காவல்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து பெட்டாலிங் ஜெயா ஓசிபிடி துணை ஆணையர் மொஹமட் சைனி செ டின் கூறுகையில், அப் பெண்ணும், அவரது காதலரும் இருந்த காரை நோக்கி மோட்டாரில் வந்த அவரது முன்னாள் கணவர், கையெறி பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். அப்போது அப்பெண் காரை சுத்தம் செய்து கொண்டிருந்திருக்கிறாள்.”

#TamilSchoolmychoice

“சுதாரித்துக் கொண்ட அப்பெண் அங்கிருந்து தாவிக் குதித்து அதிர்ஷ்டவசமாகத் தப்பியுள்ளார்” என்று மொஹமட் சைனி தெரிவித்துள்ளார்.