Home Slider சிம்பு-அனிரூத்திற்கு நடிகர் சங்கம் கண்டனம் – நாசர் அறிக்கை!

சிம்பு-அனிரூத்திற்கு நடிகர் சங்கம் கண்டனம் – நாசர் அறிக்கை!

528
0
SHARE
Ad

nazarசென்னை – பீப் பாடல் தொடர்பாக நடிகர் சங்கம் தங்கள் கருத்தினை ஏன் பதிவு செய்யவில்லை என நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், குறிப்பிட்ட அந்த பாடல் தொடர்பாக கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சினிமா என்பது கலைக்கும், பல கோடி வியாபாரத்துக்கும் இடையே பயணிக்கிற ஊடகமாக இருக்கிறது. அதை மக்களும் உணர்ந்தே இருக்கிறார்கள். அதனால், அதற்கு சில எல்லைகளை தளர்த்தி விரிவாக்கி தந்து இருக்கிறார்கள். அதை உணர்ந்த திரைக்கலைஞர்கள் பலரும் சினிமா ஊடகத்தை திறம்பட பயன்படுத்தி வெற்றியும் பெற்று வருகிறார்கள். அவர்களை மக்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளாகக் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் அதுவே எல்லை மீறி செல்லும்போது, முகச்சுளிப்பையும் சினத்தையும் வெளிப்படுத்தி எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள்.”

“முறையாக வெளியிடப்பட்டதா, திருட்டுத்தனமாக கசிந்ததா என்ற சந்தேகத்துக்கிடையே அனிரூத் இசையில், சிம்பு எழுதி, பாடியதாக வெளியாகி இருக்கும் பாடலில் ‘பீப்’ செய்யப்பட்டு கேட்பவர்களின் யூகத்துக்கு விடப்பட்ட வார்த்தைகள் மிக கொச்சையான உணர்வையும், பெண்களை இழிவுபடுத்தியும் இருப்பதால் அது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. ஒரு கலைஞனின் கருத்து மக்களிடையே சென்றடைந்து அது எதிர் விமர்சனங்களை ஏற்படுத்துகிறபோது, அது சம்மந்தப்பட்ட கலைஞர்கள், மக்களின் உணர்வை மதித்து வருத்தமோ, மன்னிப்போ கேட்டு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது கடமையாகிறது.”

#TamilSchoolmychoice

“அந்த கலைஞர்களுக்கு கால அவகாசம் கொடுத்து காத்திருந்தோம். இன்று இந்த விவகாரம் மக்கள் மன்றத்தை மட்டுமல்ல, நீதிமன்றத்தையும் சென்றடைந்துள்ளது. இதில் சம்மந்தப்பட்ட கலைஞர்கள் விரைவில் இதிலிருந்து விடுபட்டு புதுப் பொலிவோடு கலைப்பணி ஆற்ற வேண்டும் என்பதே சங்கத்தின் விருப்பம். தொழில்நுட்பம் அதி வேகமாக வளர்ந்து வரும் இந்தக் காலக்கட்டத்தில் இந்த ‘பீப்’ பாடல் என்கிற இந்த நிகழ்வு எல்லா கலைஞர்களுக்கும் படிப்பினையாக அமைந்துள்ளது. வருங்காலத்தில் இப்படி மீண்டும் ஒரு சங்கடமான சூழல் வந்து விடக்கூடாது என்று விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.