Home Featured இந்தியா எல்லைப் பாதுகாப்புப் படை விமான விபத்து: பயணித்த அனைவரும் பலி!

எல்லைப் பாதுகாப்புப் படை விமான விபத்து: பயணித்த அனைவரும் பலி!

956
0
SHARE
Ad

bsf-plane-crashபுது டெல்லி – டெல்லி துவாரகா அருகே இன்று காலை விபத்திற்குள்ளான எல்லைப் பாதுகாப்புப் படை விமானத்தில், பயணம் செய்த 10 பேரும் உயிரிழந்தாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பினை, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா அறிவித்துள்ளார்.

இன்று காலை துவாரகாவில் இருந்து ராஞ்சி புறப்பட்டுச் சென்ற சூப்பர் கிங் விமானம், பக்டொலா கிராமப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில், எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் 3 பேர் மற்றும் 7 தொழில் நுட்ப வல்லுநர்கள் பயணம் செய்தனர்.

CWzotSTWwAEShceவிமானம், பக்டொலா பகுதியில் இருந்த சுவர் மீது மோதியாதால் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. முதல்கட்ட தகவலில், இருவர் இறந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது 10 பேரும் இறந்தது தெரிய வந்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த விபத்து குறித்து, உடனடி விசாரணை மேற்கொள்ள குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.