Home Featured நாடு கோத்தா ராயா ஆர்ப்பாட்டம் தொடர்பில் அலி திஞ்சுவிற்கு இரண்டு நாள் காவல்!

கோத்தா ராயா ஆர்ப்பாட்டம் தொடர்பில் அலி திஞ்சுவிற்கு இரண்டு நாள் காவல்!

713
0
SHARE
Ad

ali-tinjuகோலாலம்பூர் – கடந்த வாரம் கோத்தா ராயா வணிக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக மொகமட் அலி பகாரோம் என்ற அலி திஞ்சுவை இரண்டு நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 117-ன் கீழ் அவரைத் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் சைனுடின் அகமட் மலேசியாகினியிடன் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை கோத்தா ராயா வணிக வளாகத்தில் ஓர் ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்திய அலி திஞ்சு அங்குள்ள வணிகர்களுக்கு ‘ஒரு பாடம் கற்பிப்பதற்காக’ அங்கு விற்பனைக்கு எதிராக புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து அங்கு கைகலப்புகள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.